ஒசாமாவின் இறப்புக்குப் பின்னராக சர்வதேச அரங்கில் நிலவி வருகின்ற சலசலப்புகளால் உண்டான பதிவே இது. உலகப்பயங்கரவாதியைக் கொன்றுவிட்டோம் என அமெரிக்க மக்கள் பெருமையுடனும், சந்தோசத்துடனும் ஒபாமாவை கொண்டாடுகின்ற காட்சிகள் ஒரு புறமாயும், ஒசாமா போன்றோரை முஸ்லிம்களின் காவலாளியாய்ப் பார்க்கும் முஸ்லிம்களிற் சிலர் ஒசாமாவின் மரணத்தை கண்டித்தும், ஒபாமாவையும்,அமெரிக்காவையும் வீதிகளில் கேவலப்படுத்தி கோஷமிடும் காட்சிகள் இன்னொரு புறமாயும் தொலைக்காட்சிகளில் மாறி மாறி காணபிக்கப்படும் போது என் போன்ற அன்பை மையப்படுத்தும் ஒருவனால் இப்படித்தான் பதிவிட முடிகிறது.
உலகின் ராஜாவாக தன்னைத்தான் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்,அதற்காய் எத்தனை உயிர்களை அழிக்க நேர்ந்தாலும் கவலைப்படாதிருக்கும் உலக வல்லரசு அமெரிக்காவை எதிர்ப்பது எவ்வளவு நியாயமானதோ, அதே அளவு நியாயமானது மதம் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு பல அப்பாவி உயிர்களின் அகால மரணங்களுக்கு காரணமான ஒசாமா பின்லேடனை எதிர்ப்பது. நாம் இறைவனிடத்தில் மாத்திரம் கேட்கின்றவர்கள் என்று கூறிக் கொண்ட ஒசாமா போன்றவர்கள் வன்முறையில் நம்பிக்கை உள்ளவர்கள்.இவர்கள் கலைவடிவங்களை வன்முறையால் எதிர்கொண்டவர்கள். வன்முறையின் வாள் அவன் கழுத்திலேயே விழும் என்பதற்கு பின்லேடனின் மரணம் ஒரு சிறந்த உதாரணமாகும்.சூழழியல் அறிவில்லாத,இடமறிந்து பேசத்தெரியாத, காலத்தை உதாசீனம் செய்கின்ற ஒரு சில உலமா உறுப்பினர்கள் எடுக்கின்ற தீர்மானங்களும் இது போன்றவையே. பேரினவாதத்திற்கும்,வன்முறைக்கும் சோரம் போகின்ற வஹாபியத்தனத்திலிருந்து உதயமாகின்ற சிந்தனைகளே. வன்முறையும்,ஆன்மீகமும் ஓரிடத்தில் இருக்க முடியாதென்பதை'வஹாபிஷம்' அறிந்து கொள்ளாது. சித்தர்கள்,சூபிகள்,ஜென் துறவிகள் ஒரு போதும் வன்முறையை வலியுறுத்தியதில்லை.இவர்கள் ஒரு பொழுதும் பேரினவாதம் பேசியதில்லை. இவர்கள் வன்முறையை ஒரு சமூகத்தின் மீது திணிக்கத் தூண்டியதில்லை.அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் அதிகமான திருநாமங்கள் அன்பையே இயம்புவது கவனிக்கத்தக்கது.
அனைத்தையும் அன்பின் அடிப்படையில் அனுகச் சொல்கின்றவர்கள். இறைவன் எல்லா உயிரினங்களையும் நேசிக்கின்றான் என்று கூறுகின்றவர்கள். இஸ்லாமியன்,கிறிஸ்தவன்,தமிழன்,சிங்களவன், அமெரிக்கன், அரேபியன், வெள்ளையன், கருப்பன் என்று பிரித்து நோக்குவதில்லை.இறைவன் எல்லா உயிர்களையும் நேசிக்கின்றான் என்று வலியுறுத்துபவர்கள். இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய மதங்களிலுள்ள அடிப்படைவாதிகள் போன்று தத்தமது மதங்களும் தத்தமது இறைவனுமே சரியானது என்று வலிந்து திணிப்பவர்களாக ஒரு போதும் ஆன்மீகவாதிகள் இருந்ததில்லை. இதனால்தான் ஏகமானதாக இறைவனையும் இறைவனின் வெளிப்பாடுகளாக அனைத்தையும் அவர்களால் பார்க்க முடிவதால் தங்கு தடையின்றி சக மனிதனையும்,சக உயிர்களையும் தனது பிம்பமாக சூபிகளால் பார்க்க முடிகிறது. இதைத்தான் மூமினுக்கு மூமின் கண்ணாடி என்று நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவருக்கொருவர் கொள்கைகளில்,செய்கைகளில், குணாதிசயங்களில், விருப்பு வெறுப்புக்களில் வேறுபாட்டோடு காணப்படுவது இயல்பான விடயம்.இத்தகைய பல்வகைத்தன்மைதான் சமுதாயத்தின் நிலைபேறுக்கு அடிப்படை. இப்பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொண்டு,அணுசரித்து,ஒருவருக்கொருவர் மதிப்பளித்து அன்பு செலுத்தி வாழக்கூடிய வகையில் மனிதர்களை நெறிப்படுத்துவதுதான் மதங்களினது நோக்கமாக இருக்கின்றது. இத்தகைய உயரிய நோக்கங்களை சிறிதும் புரிந்து கொள்ளாத மத வெறி பிடித்தவர்கள் மத குருமார்களாய் இடம்பிடித்தமையால்தான் உலக மக்களுக்கிடையே சாந்தி சமாதானம் என்ற எண்ணக்கருக்களே அந்நியமாகிப் போனமைக்கு பிரதான காரணமாயிற்று. எனவே எங்களுக்குள் உள்ளார்ந்த அன்பையும், காருண்யத்தையும் விதைக்காத எந்தவொரு கல்வியையும், போதகனையும் புறக்கணிப்பதென்பதுதான் நேரிய வழியின் நுழைவாயிலை நாம் கண்டடைவதற்கான முக்கிய முன்முனைப்பாக இருக்கும்.
எல்லோரும் அன்பு செய்ய கடவது.
2012 இல் உலகம் அழியப்போவதாகவும்,சுவர்ணயுகம் தோன்றப் போவதாகவும் சொல்கிறார்கள். ஒசாமாவின் அழிவையும் ஒலகம் போற போக்கையும் பார்க்குறப்போ
ReplyDeleteஇது நடக்குமோன்னுதான் தோணுது.இந்த நேரத்தில ஒருத்தனுக்கொருத்தன் அடிச்சுக்காம ஹூசைன் அமளலானா சொல்ற மாதிரி அன்பா இருக்குறதுதான் நல்லம். நடுநிலமையா எழுதுறீங்க மௌலானா.. வாழ்த்துகள்