Wednesday, April 27, 2011

அறியாமையே நாம் எதிர்கொள்ளும் முதல் எதிரி..

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் அறிவியலுக்கான முதற் குரலாக ஒலித்தது. ஆன்மீகத்தையும் உலகளாவிய அறிவியலையும் போதித்தது. எனினும்> முஸ்லிம்கள் அந்த அறிவியலையும் ஆன்மீக முன்னேற்றத்தையும் சரியாக புரிந்து கொள்ளவில்லை.ஆக்கிரமிப்பாளர்களின் நவகாலனியம்> சியோனிஸ்ட்டுகளின் சூழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றை மிகச்சரியாகப் புரிந்து கொள்வதுதான் தற்போது நமக்கு முன்னால் உள்ள சவாலாகும்.இதற்காக பரந்தளவிலான வாசிப்பும்> கற்றல் முயற்சிகளும் அவசியமாகின்றன. தீமையின் ஆணிவேர்களை அறிந்து கொள்வதும் நாம் வாழும் காலத்தில் புரையோடிப் போயிருக்கும் இறைநிராகரிப்பின் (குப்ர்) பல்வேறு வடிவங்களை இனங்கண்டு அதிலிருந்து ஒதுங்கி வாழ்வதுமே உண்மையான தௌகீதாக இருக்கின்றது. அறிவற்ற ஆன்மீகத்தினாலும்> ஆன்மீகமற்ற அறிவினாலும் நாம் எதையும் சாதிக்க முடியாது.

இன்று முஸ்லிம் உலகு அறிவியல் இல்லாத ஆன்மீகத்தையுச் சுமந்து துயரப்படுகிறது. முpகச் சில்லறைத்தனமான விடயங்களில் முழுக்கவனமும் குவிக்கப்பட்டு சமூகம் குழுக்களாகவும்> கட்சிகளாகவும்> நிறுவனங்களாகவும் பிளவுபட்டு நிற்கின்றது. உண்மையான எதிரி யார் என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறுகின்றோம். இன்று யூதர்கள் ஓர் அகன்ற இஸ்ரேலை உருவாக்குவதற்கான திட்டத்தில் கவனம் குவித்து வருகின்றனர்.Gazzettre Vol-10 for Iran  என்ற பத்தாயிரம் பக்கங்களைக் கொண்ட சியோனிச ஆவணத்தில் இந்த அகன்ற இஸ்ரேலின் எல்லையும் வரைபடமும் அதை அடைவதற்கான திட்டமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. சியோனிசத்தின் விஸ்தரிப்பு வாதம்> உலகமயமாதல் என்கிற சர்வதேச பாஸிசம்>கலாசாரத்தின் வன்முறை> ஊடகப் பயங்கரவாதம் போன்ற உம்மத்திற்கெதிரான பயங்கர எதிரிகளை நாம் கண்டு கொள்ளவில்லை. இவற்றிலிருந்து நாம் உணர்வு பெறவோ பாடம் கற்கவோ இல்லை.
இன்று முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் சர்வதேச ரீதியில் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். எதிரிகளை இனங்காட்டுவதும் சமூகப் புணர்நிர்மானத்திற்கான பணிகளை ஊக்குவிப்பதும்> பத்திஜீவிகளின் அடிப்படைக்கடமையாகும்.

இன்று உலகலாவிய ரீதியில் இஸ்லாத்தின் தனித்துவத்தையும்> அடையாளத்தையும் அழித்தொழித்து அமெரிக்க மயமாதல் என்ற கலாசார> பொருளியல் தளமாற்றத்தை நோக்கி உலகம் நகர்த்தப்படுகின்றது. இந்தப் பேரபாயத்தை நாம் புரிந்து கொள்ளாமல் தேசிய ரீதியான சமூக மாற்றத்தைக்கூட எட்ட முடியாது. 'உலகளவில் சிந்தி> உள்நாட்டளவில் செயற்படு'Think globally,Act locally) என்பதுதான் நாம் மீண்டும் மீண்டும் அழுத்த வேண்டிய கருத்து. இஸ்லாமிய நாகரீகத்தை எதிர்த்துப் போராடி வரும் மேற்கு நாகரீகம் அதற்கான போர்க் கருவிகளாக சினிமா இசை போன்றவற்றைக் கூட நேர்த்தியாகப் பயன்படுத்தி வருகின்றது. இன்னொரு புறம் முஸ்லிம்களுக்குள்ளேயிருந்தே சாத்தானிய வசனங்களையும் லஜ்ஜாக்களையும் முளைப்பிக்கின்றது. இவை நமது பண்பாட்டைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள்.
இலங்கையிலும் வெளிவருகின்ற பல இலக்கியங்கள் நமது இஸ்லாமிய அடையாளத்தையும் தனித்துவத்தையும் சிதைக்கக் கூடியன. ஒரு சமூகம் அரசியல் சுதந்திரத்தை இழப்பதை விட பண்பாட்டுச் சுதந்திரத்தை இழப்பதே மிக ஆபத்தானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நமது சமூகத்திற்கு புறத்தே இருந்து வரும் பேரபாயங்களையும் சவால்களையும் புரிந்து கொண்டு நமது உண்மையான எதிரிகளை அடையாளம் கண்டு அதற்கெதிராக போராட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் மிகப்பெரும் துரதிஸ்டம் நாம் பல்வேறு முகாம்களாக பிரிந்து நிற்கின்றோம். இஸ்லாத்தை வணக்கத்திற்குரிய பேசு பொருளாக மட்டும் ஆக்கி வந்துள்ளோம். ஆன்மீகத்தை மட்டும் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்யும் ஆலிம்கள் இந்த உலகளாவிய யதார்த்தங்களையும் நமது மக்களுக்குச் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். அதே வேளை இஸ்லாம் காகிதங்களில் வாழும் இலக்கியமோ ஒலி பெருக்கியினூடாக காதை பிளக்கும் வெறும் சத்தங்களோ அல்ல. நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவோடும் அது ஒன்றிக்க வேண்டும்.

அறியாமைதான் நாம் எதிர்கொள்கின்ற முதல் எதிரி என்பது நம்மில் பலருக்குத் தெரியாமல் போகின்றது. அந்த அறியாமையை எதிர்த்து போராடுவதற்கான ஆயுதம் ஒவ்வொரு பிரதேசத்திலும் நூலகங்களை உருவாக்குவது அந்த நூலகங்களின் வாயிலாக அறிவை நுகர்கின்ற கருத்துக்களை ஆக்கபூர்வமாக விவாதிக்கின்ற முடிவில் செழுமையான கருத்தியல் தளங்களுக்கு சமூகத்தைக் கொண்டு வருகின்ற முதிர்ச்சியான அறிவுஜீவிகள் நமக்குத் தேவை. இந்த காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து செயற்படுவோமாக!
                                                                                              (மீள்பார்வை இதழ் 110 ஜுன் 2005)


Friday, April 22, 2011

அன்பே அனைத்துமாய் இருக்கிறது.

வாழ்வை நேசி! உலகை நேசி! உயிர்களை நேசி! அதுவே இறைவனின் நேசம். வாழ்வைப் பற்றிய சூபிகளின் கருத்து இதுவாகும். சூபி ஞானி கபீரின் பாடல்கள் முழுவதும் நேசத்தை வலியுறுத்துகின்றன. நேசத்தை தேவகீதம் என்கிறார் கபீர்பாய்.
அன்பே கடவுள் என்றனர் மகான்கள்.
அன்பே தத்துவம் என்றார் புத்தர்.
அன்பே சிவம் என்றனர் சித்தர்கள்.
கர்த்தர் அன்பாயிருக்கிறார் என்றார் ஏசு.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று  கூறுகின்றது இஸ்லாம்.
  அனைத்து தர்மங்களும் அன்பையே பேசுகின்றன. இதுதான் உண்மையான இறை அன்பாகும். உலகத்தில் சிறந்த அன்பின் இடமான தாயன்பை விட பல மடங்கு அதிகமான பேரன்பே இறை அன்பாகும். இது உண்மையென்றால் மாண்டவர் பல கோடி மாந்தரில் ஒரு சிலரை மட்டும் சுவர்க்கம் அனுப்பிவிட்டு மற்றவர்களை நரகத்திற்கு அனுப்பும் அர்த்தமற்ற கோபம் அவனிடம் இருக்காது என்பதாக, மதங்களைகடந்து மனதை அன்பினுள் முகிழ்த்து வாழும் அறிஞர்களும்,ஞானிகளும் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

Tuesday, April 19, 2011

ஏகம்.

இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்
நீ உனது மொழியிலும்....
நான் எனது மொழியிலும்....
ஆனால்
இருவரும் ஒரே அறையில்தான் இருந்தோம்.