வாழ்வை நேசி! உலகை நேசி! உயிர்களை நேசி! அதுவே இறைவனின் நேசம். வாழ்வைப் பற்றிய சூபிகளின் கருத்து இதுவாகும். சூபி ஞானி கபீரின் பாடல்கள் முழுவதும் நேசத்தை வலியுறுத்துகின்றன. நேசத்தை தேவகீதம் என்கிறார் கபீர்பாய்.
அன்பே கடவுள் என்றனர் மகான்கள்.
அன்பே தத்துவம் என்றார் புத்தர்.
அன்பே சிவம் என்றனர் சித்தர்கள்.
கர்த்தர் அன்பாயிருக்கிறார் என்றார் ஏசு.
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று கூறுகின்றது இஸ்லாம்.
அனைத்து தர்மங்களும் அன்பையே பேசுகின்றன. இதுதான் உண்மையான இறை அன்பாகும். உலகத்தில் சிறந்த அன்பின் இடமான தாயன்பை விட பல மடங்கு அதிகமான பேரன்பே இறை அன்பாகும். இது உண்மையென்றால் மாண்டவர் பல கோடி மாந்தரில் ஒரு சிலரை மட்டும் சுவர்க்கம் அனுப்பிவிட்டு மற்றவர்களை நரகத்திற்கு அனுப்பும் அர்த்தமற்ற கோபம் அவனிடம் இருக்காது என்பதாக, மதங்களைகடந்து மனதை அன்பினுள் முகிழ்த்து வாழும் அறிஞர்களும்,ஞானிகளும் சொல்வது கூர்ந்து கவனிக்கத்தக்கது.

சரியாகச் சொன்னீங்க..இன்று எல்லா மதங்களும் அன்பை விடுத்து ஆச்சாரங்களையல்லவா போதிக்கின்றன.
ReplyDelete